» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காமராஜ் கலை கல்லூரியில் வாக்காளர் தினம்

திங்கள் 25, ஜனவரி 2021 9:05:15 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டார்.

தூத்துக்குடி காமராஜ் கலை கல்லூரியில் 11வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கும் நிகழ்ச்சி இன்று (25.01.2021) வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி எடுத்தார். பின்னர் புதிய இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார். புதிய இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். 11வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.2500, இரண்டாவது பரிசு ரூ.2000, மூன்றாவது பரிசு ரூ.1500 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.2500, இரண்டாவது பரிசு ரூ.2000, மூன்றாவது பரிசு ரூ.1500 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணிபுரிந்த 4 வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மற்ற சட்டமன்ற தொகுதிகளில் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அவரிடம் நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

கல்லூரி சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முனைவர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் து.நாகராஜன், வட்டாட்சியர் ஜஸ்டின், துணை வட்டாட்சியர் (தேர்தல்) திரு,செல்வபூபதி மற்றும் காமராஜ் கல்லூரி அலுவலர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory