» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சை சாப்பிட்டு பாருங்க! நன்மைகள் தானாகவே தேடி வரும்!!



உலர் திராட்சை சாப்பிடுவது பல நன்மைகளை தரும். அந்தவகையில் தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்ன என்பதை பார்ப்போம்.

உலர் திராட்சையை கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். மேலும் ப்ரீ-ராடிக்கல்களால் கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு வழிகளின் மூலம், உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது.

உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.

உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

உலர் திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory