» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்
இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம்!!
அத்தி பழத்தில் விட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும். மேலும் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம்.
இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. இன்சோம்னியா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும்.
அத்தி பழங்களின் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறையவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் நீக்கப்படும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். நெடுநாளாக இது மாதிரி தொந்தரவு உள்ளவர்களுக்கு அத்தி பழம் ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.
ஒரு அவுன்ஸ் காய்ந்த அத்திப்பழங்களில் 300 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரிப்படுத்த உதவும். அத்தி பழங்களை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும்.
குழந்தைகளுக்கு இந்த பழங்களை தருவதன் மூலம் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகமாகச் செயல்படுவர்.
அத்தி பழங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள மிகவும் உதவுகின்றது. மேலும் இந்த அத்தி பழங்கள் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்துகிறது.
எக்சிமா, சோரியாசிஸ் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு அத்தி பழம் மருந்தாகச் செயல்படுகின்றது. அத்திப்பழங்ளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோலில் ஏற்படும் வெண் புள்ளிகள், வெண்குஷ்டம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.
அத்தி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றப் பெரிதும் உதவுகின்றன.இந்த செயல்பாட்டால் அத்தி பழத்தைத் தினம் எடுத்துக் கொள்பவருக்கு வயதான தோற்றம் சீக்கிரம் தோன்றாது.
அத்தி பழங்களில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணப்படுத்த உதவும். குறிப்பாக மெனபோஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். அந்த சமயங்களில் அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.