» சினிமா » செய்திகள்
கூலி, தக்லைப், விடாமுயற்சி.... 2025ல் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் பட்டியல்
சனி 4, ஜனவரி 2025 7:51:07 PM (IST)

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சுமார் 250 படங்களுக்கு மேல் வெளியான நிலையிலும் அதில் முக்கிய நடிகர்களின் படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருந்தன. சிறுபட்ஜெட் படங்களே அதிக எண்ணிக்கையில் வந்தன.
ஆனால் இந்த 2025 புதிய ஆண்டில் முக்கிய நடிகர்கள், முக்கிய இயக்குனர்களின் பல படங்கள் திரைக்கு வருவதற்காக வரிசை கட்டி நிற்கின்றன. இது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
2025ல் வெளியாக உள்ள சில முக்கிய படங்களின் விவரங்கள்: ‘ஜெயிலர்' வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘கூலி'. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த வருடம் ‘கூலி’ திரைக்கு வருகிறது.
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞரான கமல்ஹாசன், ஆகச்சிறந்த இயக்குனர் மணிரத்னம் இணைந்துள்ள ‘தக்லைப்', இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 37 வருடங்களுக்குப் பிறகு கமல் மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகி உள்ளது. இதுபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் ‘இந்தியன்3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களையும் இந்த வருடம் திரையில் பார்க்கலாம்.
அரசியலுக்கு வந்துள்ள விஜய் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர் களுக்கான அதிரடி சண்டை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், அரசியல் வசனங்களும் அதிகம் இடம்பெறும் என்கின்றனர். இது இந்த வருடம் இறுதியில் திரைக்கு வரும்.
அஜித்குமார் கார் ரேஸ், பயணங்கள் என ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும், அதே முக்கியத்துவத்தை சினிமாவுக்கும் தருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள ‘விடாமுயற்சி'யும் வெளி வருகிறது. இதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் 2025 வருட ரிலீஸ் பட்டியலில் உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ', அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்', தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை', `அமரன்' வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்' உள்ளிட்ட மேலும் சில படங்களும் இந்த வருடம் ரிலீசாக இருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அஜித்தின் குட்பேட் அக்லி ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:35:07 PM (IST)

தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:45:02 AM (IST)

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவு: வைரமுத்து இரங்கல்!!
புதன் 9, ஏப்ரல் 2025 5:09:52 PM (IST)

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசியிருக்க கூடாது : நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்!
புதன் 9, ஏப்ரல் 2025 12:46:33 PM (IST)

ரஜினியின் கூலி ஆக.14ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:30 PM (IST)

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1ல் ரிலீஸ்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)
