» சினிமா » செய்திகள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி: லைகா நிறுவனம் அறிவிப்பு

புதன் 1, ஜனவரி 2025 11:44:03 AM (IST)



அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது குறித்து லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதே ரிலீஸ் தள்ளிப் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட போது அது தொடர்பான போஸ்டர்களில் பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டது லைகா நிறுவனம். அதற்கு பின்பு வெளியான பாடல் மற்றும் அதனை விளம்பரப்படுத்த வெளியிட்ட வீடியோ பதிவுகள், எக்ஸ் பதிவுகள் என அனைத்திலுமே பொங்கல் வெளியீட்டை எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மதம் மாறியது ஏன்? நடிகை ரெஜினா விளக்கம்!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 12:49:30 PM (IST)


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory