» சினிமா » செய்திகள்

அமரன் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

வியாழன் 7, நவம்பர் 2024 3:37:57 PM (IST)

அமரன் படத்தின் வெற்றியை தனது ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடினார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அமரன்’ படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, இப்போது மும்பையில் இருக்கிறார்கள்.

இதனிடையே, ‘அமரன்’ படத்தின் வெற்றியை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, "தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர் மன்ற தம்பிகளுக்கும் நன்றி. அனைத்து படங்களுக்குமே கொண்டாட்டம் நன்றாக இருக்கும்.

‘அமரன்’ படத்துக்கு பயங்கரமாக இருந்தது. முதல் நாள் முதல் காட்சியில் தோரணம் எல்லாம் கட்டி கொண்டாடுவது மட்டுமன்றி, ‘நாள்தோறும் நற்பணி செய்வோம்’ என நிறைய நல்ல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். முதல் நாள் கொண்டாட்டத்தை விட, ‘நாள்தோறும் நற்பணி செய்வோம்’ என்பது தான் சிறப்பான விஷயம். அது தான் ரொம்ப முக்கியமும் கூட.

நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம், கொண்டாடுகிறோம் என்பதற்காக மட்டுமே கொண்டாட்டம் இருக்க வேண்டும். அவர்களை விட நாம் பெரிய ஆள் என்பதற்காக இல்லவே இல்லை. அனைவருமே நமது சகோதரர்கள் தான். அடுத்த படங்களுமே சிறப்பாக இருக்கும். நீங்கள் இதே அளவுக்கு சந்தோஷப்படும் அளவுக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory