» சினிமா » செய்திகள்

சாவர்க்கர் பற்றிய பேச்சு: வருத்தம் தெரிவித்த சுதா கொங்கரா!

சனி 27, ஜூலை 2024 12:36:43 PM (IST)

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா அண்மையில் சாவர்க்கர் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில், "நான் பெண் கல்வி குறித்து படித்தபோது, எனது ஆசிரியர் ஒருவர் சாவர்க்கர் பற்றிய கதையை சொன்னார். சாவர்க்கர் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் அவர் தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில் அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். சாவர்க்கரின் மனைவி படிப்பதற்காக சென்றபோது அவரை அந்த தெருவில் இருந்தவர்கள் கேலி செய்துள்ளனர். இதையறிந்த சாவர்க்கர், தனது மனைவியை தானே பள்ளிக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளார்" என்று பேசி இருந்தார்.

சுதா கொங்கராவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், சாவர்க்கர் பற்றிய தனது பேச்சுக்கு சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்துநான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.

மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory