» சினிமா » செய்திகள்
சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர்!
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:47:21 AM (IST)
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் சூர்யா நடிக்கும் ஹிந்தி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.
நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.இந்தப் படத்திற்குப் பின் சூர்யா இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.
ஹிந்தியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.இந்நிலையில், ஜான்வியின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர், சூர்யாவுடன் ஜான்வி நடிக்க உள்ளதை நேர்காணல் ஒன்றில் கூறி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.