» சினிமா » செய்திகள்

செய்வினை வைத்துவிடுவதாக பெண் மிரட்டல்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் புகார்!

வெள்ளி 26, ஜூலை 2024 4:50:43 PM (IST)

செய்வினை வைத்துவிடுவதாக பெண் மிரட்டல் விடுப்பதாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. அதில் நடித்து வருபவர் சதீஷ்குமார் (40). இவர் அந்த சீரியலில் கோபி எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் அவர் ரசிகர்களிடையே பிரபலம். இவரது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் பாக்கியா, ராதிகா ஆகிய இரு மனைவிகளுடன் படாதபாடுபடுகிறார்.

சீரியலில்தான் இரு பெண்களால் பிரச்சினை என்றால் இவருக்கு நிஜ வாழ்விலும் ஒரு பெண்ணால் சூனியம் வைக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு அறுபடை முருகன் கோயிலுக்கு நான் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அத்துடன் சில நாட்கள் கழித்து அந்த பெண், எனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். செல்பி எடுக்க வேண்டும் என்றும் தொந்தரவு தரும் வகையிலும் அடிக்கடி எனக்கு போன் செய்தார், இதனால் நான் அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது அடையார் வீட்டுக்கே வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory