» சினிமா » செய்திகள்

கார் சாவி காணவில்லை: ரஜினி இளைய மகள் புகார்...!

புதன் 10, மே 2023 5:13:59 PM (IST)

கார் சாவி காணவில்லை என நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார். இவர் அவரின் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், "கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் கல்லூரிக்கு சென்றேன். அப்பொழுது எனது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனது. அதனால் அதை தயவு செய்து கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் வீட்டில் இருந்த லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory