» சினிமா » செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

ஞாயிறு 19, பிப்ரவரி 2023 7:46:27 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலையில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்தார். கோவிலில் இருக்கும் பேட்டரி கார் மூலும் அழைத்து வரப்பட்ட அவர்கள் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹாரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்கள் ஒருவருக்ெகாருவர் முண்டியடித்துக் கொண்டு 'செல்பி' எடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory