» சினிமா » செய்திகள்

யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த எம்.எஸ்.தோனி!

வியாழன் 16, பிப்ரவரி 2023 4:11:34 PM (IST)நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். 

ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார். நதியா, யோகிபாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷ்வஜித் படத்திற்கு இசையமைக்கிறார். தோனி புரொடக்‌ஷன் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை மற்றும் படத்தின் தலைப்பு குறித்தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை தோனி பரிசளித்துள்ளார். இது தொடர்பாக யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "எம்.எஸ். தோனி கைகளில் இருந்தும் அவர் விளையாடிய நெட்டில் இருந்தும் நேரடியாக இந்த பேட் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பேட்டை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி தோனி சார். உங்கள் கிரிக்கெட் நினைவுகளைப் போல சினிமாவில் நீங்கள் கால்பதித்திருக்கும் இந்த நினைவுகளையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்" என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory