» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்திடம் படுதோல்வி : 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா மோசமான சாதனை!
புதன் 8, ஜூலை 2026 11:33:11 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான ரன் வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலடி கொடுக்கக் களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலைந்த இந்திய அணி, 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், "உண்மையைச் சொன்னால், எங்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடுகளத்தைப் பார்த்தபோது இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய பிட்ச் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அதையும் தாண்டி நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. பவர்பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது; அங்குதான் நாங்கள் போட்டியை கோட்டை விட்டோம்" என்று கூறினார்.
மேலும், "இந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு வீரரும் அணிக்காகத் தங்களது பங்களிப்பை எப்படி வழங்குவது, ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுவது என்பதைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும்" என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)








