» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:08:40 AM (IST)

டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், நமீபிய அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சஹிப்சதா பர்ஹான் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசினார். அவர் 58 பந்துகளில் 100 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷதாப் கான் 36 ரன்கள் எடுத்தார்.
200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நமீபியா, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4-வது தோல்வியைத் தழுவிய நமீபியா தொடரிலிருந்து வெளியேறியது. தனது பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான், சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் வரும் 21-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியைச் சிதறடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் அதிரடியில் அபார வெற்றி!
புதன் 6, மே 2026 10:25:41 AM (IST)

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)










