» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
யு19 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு
சனி 7, பிப்ரவரி 2026 3:43:39 PM (IST)

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரின் வரலாற்றில் இந்திய அணி வெல்லும் ஆறாவது சாம்பியன்ஷிப் பட்டமாக இது அமைந்தது.
"யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளையோர் அணியை எண்ணி ஒட்டுமொத்தமா தேசமும், பிசிசிஐ-யம் பெருமிதம் அடைகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி பெறாமல் சாம்பியின் ஆகியுளளது. அதுவும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய விதம் அபாரம். அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.7.5 கோடி பரிசு அறிவிக்கிறோம்” என பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்தார்.
இந்த தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி இருந்தார் இந்தியாவின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. மொத்தம் 259 பந்துகளில் 439 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 41 பவுண்டரிகள் மற்றும் 30 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இறுதிப் போட்டியில் 175 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதன் மூலம் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியைச் சிதறடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் அதிரடியில் அபார வெற்றி!
புதன் 6, மே 2026 10:25:41 AM (IST)

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)










