» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை 2026: அனிருத் இசையமைத்த புதிய பாடல் வெளியீடு!

சனி 31, ஜனவரி 2026 12:17:01 PM (IST)

2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஆடவருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ”பீல் த த்ரில்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹைசன்பர்க் எழுதிய இந்த ஐசிசியின் புதிய பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். 

இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி உள்பட மொத்தம் 5 இடங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இலங்கையில் மூன்று திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி டி20யில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக வெற்றியுடன் இந்தப் போட்டியை முடிக்க வேண்டுமென வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் இருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory