» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!

வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா 28 ரன்கள், ஷிவம் துபே 22 ரன்கள், அக்‌ஷர் படேல் 21 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  வாஷிங்டன் சுந்தர் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல், சிவம் துபே தலா 2 விக்கெட், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory