» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் : பாகிஸ்தான் அணி விலகல்!

வெள்ளி 24, அக்டோபர் 2025 4:09:52 PM (IST)

தமிழகத்தில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி விலகியுள்ளது.

தமிழகத்தில் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்றிருந்தது. பாகிஸ்தான் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது பிரிவில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்த அணிகள் இடம் பிடித்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஹாக்கி பெடரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்குப் பதிலாக விரைவில் புதிய அணி அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டது. 

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இதற்கு முன்னதாக பீகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இருந்து விலகியிருந்தது. தற்போது 2ஆவது முறையாக விலகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory