» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு சச்சின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இந்​நிலை​யில் 52 வயதான சச்​சின் டெண்​டுல்​கரை நிர்​வகிக்​கும் அவருடைய எஸ்​ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், "இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் தலை​வர் பதவிக்கு சச்​சின் டெண்​டுல்​கரின் பெயர் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​களும், வதந்​தி​களும் பரவி வரு​வ​தாக எங்​கள் கவனத்​துக்கு வந்​துள்​ளது. அத்​தகைய முன்​னேற்​றம் எது​வும் ஏற்​பட​வில்லை என்​பதை நாங்​கள் திட்​ட​வட்​ட​மாகக் கூற விரும்​பு​கிறோம். ஆதா​ரமற்ற ஊகங்​களுக்கு நம்​பகத்​தன்மை அளிப்​ப​தை தவிர்க்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அனை​வரை​யும் கேட்​டுக்​கொள்​கிறோம்" என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory