» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவின் புதிய தோற்றம் வைரல்!

சனி 6, செப்டம்பர் 2025 4:27:59 PM (IST)


ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட்டிகளுக்காக இந்திய அணி வியாழக்கிழமை (செப்.4) மாலை துபை சென்றடைந்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். முன்னாள் கேப்டனான இவர் காயம் காரணமாக கேப்டன்சியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். 31 வயதாகும் ஹார்திக் பாண்டியா ஃபேஷனில் அதீத ஆர்வம் உடையவராக இருக்கிறார். பாண்டியாவின் உடைகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்க்கும். அவருக்கு பெண் ரசிகர்களும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், தனது தலைமுடிக்கு செம்பழுப்பு நிற வண்ணத்தைச் சேர்த்துள்ள புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து

Sep 8, 2025 - 12:43:53 PM | Posted IP 104.2*****

அது ஒரு மயிரு , குப்பை செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory