» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு

புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதற்கு காரணத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009-ம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது.

இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது: ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.

பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். என அவர் கூறினார். பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory