» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஓராண்டில் அதிக சிக்ஸர்கள்: மெக்குல்லம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

சனி 23, நவம்பர் 2024 3:16:32 PM (IST)



ஓராண்டில் டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் நியூசிலாந்தின் அதிரடி வீரரும் தற்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்குல்லம் சாதனையை முறியடித்துள்ளார் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

34 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முன்பாக மெக்குல்லம் 2014இல் 33 சிக்ஸர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாண்டுகளாக யாரும் முறியடிக்காமல் இருந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வால் 88, கே.எல்.ராகுல் 59 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

டெஸ்ட்டில் ஓராண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

1. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 34 (2024)

2. பிரண்டன் மெக்குல்லம் - 33 (2014)

3. பென் ஸ்டோக்ஸ் - 26 (2022)

4. ஆடம் கில்கிறிஸ்ட் - 22 (2005)

5. வீரேந்தர் சேவாக் - 11 (2008)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory