» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அரை இறுதிக்கு முன்னேறிய நியூஸிலாந்து : வெளியேறியது இந்தியா!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 3:26:25 PM (IST)



மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் இந்தியா வெளியேறி உள்ளது.

‘குரூப் - ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ரன்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது.

திங்கட்கிழமை (அக்.14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சுமார் 8 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது.

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. நியூஸிலாந்து அணியின் அமெலியா கெர் (3 விக்கெட்டுகள்), எடன் கார்சன் (2 விக்கெட்டுகள்) ஆகியோர் அற்புதமாக பந்து வீசி பாகிஸ்தானை வீழ்த்தினர். அதன் மூலம் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறந்து விளங்கியது.

‘குரூப் - ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்திய இந்தியா, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி உள்ளது. கடந்த 2020-ல் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory