» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து: 4 வது முறையாக ஸ்பெயின் சாம்பியன்!

திங்கள் 15, ஜூலை 2024 11:44:47 AM (IST)



யூரோ கோப்பை கால்பந்து தொடரை 4 வது முறையாக வென்று ஸ்பெயின் அசத்தியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்ப முதலே அனல் பறந்தது. இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முனைப்பு காட்டியது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய உடனே 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியது. இந்த நிலையில் ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கிய மைக்கேல் ஓயர்சபால் 86வது நிமிடத்தில் ஒருகோல் அடித்தார். இந்த கோலால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது.

ஆனால் அவற்றையெல்லாம் ஸ்பெயின் அணி முறியடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி 4வது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory