» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20: ஆஸியை வீழ்த்தி இறுதி போட்டியில் இந்தியா!

சனி 13, ஜூலை 2024 11:02:46 AM (IST)

உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இரண்டாவது அரை இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பிரெட் லீ வீசிய 4 ஓவர்களில் மட்டும் 60 ரன்கள் குவித்தது இந்தியா சாம்பியன்ஸ். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா அதிரடி துவக்கம் அளித்தார். அம்பத்தி ராயுடு 14 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த உத்தப்பா மற்றும் யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம் ஆடினர். ராபின் உத்தப்பா 35 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். அவர் 6 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்து இருந்தார். யுவராஜ் சிங் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த பதான் சகோதரர்களான யூசுப் தான் மற்றும் இர்ஃபான் பதான் அதிரடியின் உச்சத்தை தொட்டனர். யூசுப் 23 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து இருந்தார்.

இர்ஃபான் பதான் 19 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 18 சிக்ஸ் அடித்து மிரட்டியது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது இந்தியா சாம்பியன்ஸ் அணி. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியின் பந்துவீச்சில் பீட்டர் ஸிடில் மட்டுமே நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர்.

அடுத்து 255 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி ஆடியது. அந்த அணி துவக்கத்திலேயே வரிசையாக விக்கெட்களை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏழாம் வரிசையில் களமிறங்கிய டிம் பெய்ன் 32 பந்துகளில் 40 ரன்களும், எட்டாம் வரிசையில் இறங்கிய நாதன் கோல்ட்டர் நைல் 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தனர். மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த முதல் அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வீழ்த்தி இருந்தது. இதை அடுத்து இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory