» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடம்!
வியாழன் 4, ஜூலை 2024 5:33:09 PM (IST)
சர்வேதச 'டி-20' கிரிக்கெட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, 222 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இவர் முதலிடத்தை இலங்கையின் ஹசரங்காவுடன் பகிர்ந்து கொண்டார். இதன்மூலம் இப்பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்தியரானார்.
சமீபத்திய 'டி-20' உலக கோப்பையில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய (144 ரன், 11 விக்கெட்) பாண்ட்யா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் 3 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் 12 இடம் முன்னேறிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (640 புள்ளி) 12வது இடத்தை கைப்பற்றினார். 'டி-20' உலக கோப்பையில் வேகத்தில் மிரட்டிய இவர் (15 விக்கெட்), தொடர் நாயகன் விருது வென்றார். மற்ற இந்திய பவுலர்களான அக்சர் படேல் (7வது இடம்), குல்தீப் யாதவ் (8வது), அர்ஷ்தீப் சிங் (13வது) முன்னேற்றம் கண்டனர்.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (2வது இடம்), ஜெய்ஸ்வால் (7வது) 'டாப்-10' வரிசையில் நீடிக்கின்றனர்.
'டாப்-3' பேட்டர்
'ரேங்க்' வீரர்/அணி புள்ளி
1 ஹெட்/ஆஸி., 844
2 சூர்யகுமார்/இந்தியா 838
3 சால்ட்/இங்கிலாந்து 797
'டாப்-3' பவுலர்
'ரேங்க்' வீரர்/அணி புள்ளி
1 ரஷித்/இங்கிலாந்து 718
2 நோர்க்யா/தெ.ஆ., 675
3 ஹசரங்கா/இலங்கை 674
'டாப்-3' ஆல்-ரவுண்டர்
'ரேங்க்' வீரர்/அணி புள்ளி
1 பாண்ட்யா/இந்தியா 222
1 ஹசரங்கா/இலங்கை 222
3 ஸ்டாய்னிஸ்/ஆஸி., 211