» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆர்சிபி அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

திங்கள் 1, ஜூலை 2024 12:37:42 PM (IST)



ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடருக்கு பின் ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக், இப்போது பேட்டிங் பயிற்சியாளராக புதிய ரோலில் பணிபுரியவுள்ளார். இதுதொடர்பாக ஆர்சிபி தனது வலைதளத்தில் "எங்கள் கீப்பரே (தினேஷ் கார்த்திக்) புதிய அவதாரத்தில் ஆர்சிபிக்கு மீண்டும் வருக. இனி ஆர்சிபி ஆண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் டிகே இருப்பார்!” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இன்னொரு பதிவில், "கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு மனிதனை வெளியேற்றலாம். ஆனால் ஒரு மனிதனிடமிருந்து கிரிக்கெட்டை வெளியேற்ற முடியாது” என்று கூறியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 1-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவித்தார். அந்த அறிவிப்பில், "அண்மைக் காலமாக நிறைய யோசித்து கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். தொடர்ந்து எனக்கு முன்னால் இருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.

இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், ஃபாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவில்லாமல் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், நிலைத்திருக்க முடியாது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory