» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜோஸ் பட்லர் அதிரடி: அமெரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்து அணி!!
திங்கள் 24, ஜூன் 2024 10:58:04 AM (IST)

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி அரையிறுதியில் நுழைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிட்ஜ்டெளனில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெüலிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்டர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆன்ட்ரிஸ் கோஸ் ஆகியோர் சிறந்த தொடக்கத்தை அளிப்பர் எனக்கருதப்பட்ட நிலையில், ஸ்டீவன் 12, கோஸ் 8 ரன்களுடன் நடையைக் கட்டினர்.
நிதிஷ் குமார் 30, கோரே ஆண்டர்ஸன் 29, ஹர்மீத் சிங் 21 ஆகியோர் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.கடைசி மூன்று பேட்டர்களான அலி கான், நாஸ்துஷ், செüரப் ஆகியோர் கிறிஸ் ஜோர்டன் பந்தில் டக் அவுட்டானார்கள்.
அமெரிக்கா 115/10: வெறும் 18.5 ஓவர்களிலேயே 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அமெரிக்கா.கிறிஸ் ஜோர்டான் அசத்தல் 4 விக்கெட்: பெüலிங்கில் இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறிஸ் ஜோர்டான் 10 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தரப்பில் களமிறங்கிய பிலிப் சால்ட்}ஜோஸ் பட்டல் இருவரும் அசத்தலாக ஆடி 9.4 ஓவர்களிலேயே 117/0 ரன்களைக் குவித்து தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி 7 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். அவருக்கு துணையாக ஆடிய பிலிப் சால்ட் 25 ரன்களை சேர்த்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜடேஜா போராட்டம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:28:42 AM (IST)

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த வாஷிங்டன் சுந்தர்..!
திங்கள் 14, ஜூலை 2025 11:55:13 AM (IST)

விம்பிள்டன் நாயகன்: ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் போஸ்டர் வைரல்!!
திங்கள் 14, ஜூலை 2025 11:25:38 AM (IST)

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)
