» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நிகோலஸ் பூரான் அதிரடி... ஆப்கனை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி!!
செவ்வாய் 18, ஜூன் 2024 11:45:48 AM (IST)
நிகோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்கள் குவிக்க, ஆப்கனை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார்.
219-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சத்ரான் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.