» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் போட்டிகள்!
திங்கள் 17, ஜூன் 2024 3:44:24 PM (IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வருகிற 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1- ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். முடிவில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் போட்டிகள்:
1. இந்தியா v ஆப்கானிஸ்தான் - ஜூன் 20 (பார்படாஸ்)
2. இந்தியா v வங்காளதேசம் - ஜூன் 22 (ஆண்டிகுவா)
3. இந்தியா v ஆஸ்திரேலியா - ஜூன் 24 (எஸ்டி.லூசியா)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிவேக 6அயிரம் ரன்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:33:02 PM (IST)

ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் நியமனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:42:47 PM (IST)

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்: முன்னாள் கேப்டன் நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:26:06 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா புதிய சாதனை!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:28:52 PM (IST)
