» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய வங்கதேசம்!

திங்கள் 17, ஜூன் 2024 11:21:55 AM (IST)டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8-வது அணியாக எந்த அணி தகுதி பெறப்போகிறது என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்து முதல் பந்தை எதிர்கொண்ட வங்கதேசத்தின் தன்ஷித் ஹாசன் டக் அவுட் ஆகி வெளியேறினார். வங்கதேச அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப்-அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மத்துல்லா, ரிஷத் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர்.

நேபாள அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், கேப்டன் ரோஹித் பவுடல், சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.அதைத் தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி தரப்பில் குஷால் மல்லா, திபேந்திர சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி 27 ரன்கள் மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆசிப் ஷேக் 17 ரன்களும், கேப்டன் ரோஹித் பவுடல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக பந்து வீசிய ஷகிப் அல் ஹசன் ரன் ஏதுமின்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார். 19.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வங்கதேசத்தின் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வங்கதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory