» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் வெற்றியால் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி!

திங்கள் 17, ஜூன் 2024 10:29:22 AM (IST)



டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது. இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

குரூப் பிரிவில் நேற்று செயின்ட் லூசியாவிலுள்ள டேரன் சம்மி நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த லீக் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணியின் முன்சே 35, பிரண்டன் மெக்முல்லன் 34 பந்துகளில் 60, கேப்டன் பெரிங் டன் 42, விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் 18 ரன்கள் குவித்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2, ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 49 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். 

டேவிட் வார்னர் 1, மிட்செல் மார்ஷ் 8. கிளென் மேக்ஸ்வெல் 11. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 59 ரன்கள் எடுத்தனர். டிம் டேவிட் 24 ரன்களும், மேத்யூ வேட் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வார்னர். மார்ஷ், மேக்ஸ்வெல் விரைவில் ஆட்டம் இழந்தாலும் டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று வினையாடி 68 ரன்களைக் குவித்தார். அதேபோல் ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடினார்.

அனுபவம் குறைந்த அணியாக இருந்தாலும், ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றது ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் சஃப்யான் ஷரீப், மார்க் வாட் ஆகியோர் தலா 2, பிராட் வீல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து இந்தப் பிரிவில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

இங்கிலாந்து தகுதி: இதே பிரிவில் இங்கிலாந்து அணி இடம்பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு விளையாடிய 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நிகர ரன் ரேட்டை அதிகப்படுத்திக் கொண்டு சூப்பர்-8 சுற்று வாய்ப்பில் நீடித்தது.

இந்நிலையில், நேற்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடையிலான ஆட்டம்தான் இங்கிலாந்தின் சூப்பர்-8 வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

ஒருவேளை இதில் ஸ்காட் லாந்து அணி வெற்றி பெற்றால். இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் இருந்தது. எனினும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக நிகர ரன் ரேட் அடிப்படையில், குரூப் பி -யில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory