» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூசிலாந்து!
வெள்ளி 14, ஜூன் 2024 10:55:19 AM (IST)
டி20 உலகக் கோப்பை டிரினிடாட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.லீக் சுற்றில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இரண்டிலும் தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.மொத்தமுள்ள 4 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.