» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
புதன் 12, ஜூன் 2024 4:56:52 PM (IST)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நமீபியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட நமீபியா, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:53:19 PM (IST)

உலக கோப்பை தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!
சனி 15, மார்ச் 2025 3:25:02 PM (IST)

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமன
வெள்ளி 14, மார்ச் 2025 11:50:46 AM (IST)

ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு!
வியாழன் 13, மார்ச் 2025 8:04:21 PM (IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தகுதி பெறாததால் ரூ. 45 கோடி இழப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 11:49:49 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)
