» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஷித், ஃபரூக்கி அபாரம்: நியூஸிலாந்து அணியை வென்ற ஆப்கானிஸ்தான்!

சனி 8, ஜூன் 2024 12:13:39 PM (IST)



டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

கயனாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது அந்த அணி. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்ராஹிம் ஸத்ரான், 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அஸ்மதுல்லா 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். நபி, ரஷித், குல்புதீன் ஆகியோர் சோபிக்க தவறினர். 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து குர்பாஸ் வெளியேறினார். பீல்டிங்கின் போது நியூஸிலாந்து அணி மோசமாக செயல்பட்டது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது நியூஸி. ஃபின் ஆலன் இன்னிங்ஸின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

 தொடர்ந்து கான்வே, டேரில் மிட்செல், கேப்டன் கேன் வில்லியம்சன், மார்க் சேப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், சான்ட்னர், லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் ஆட்டமிழந்தனர். முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க அந்த அணி தவறியது. ஆப்கானிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதே காரணம்.

கேப்டன் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 3 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் வீழ்த்தி இருந்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூஸிலாந்து. இதன் மூலம் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள், உகாண்டா, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள ‘குரூப் - சி’யில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஆப்கானிஸ்தான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory