» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

வியாழன் 18, ஏப்ரல் 2024 3:30:13 PM (IST)சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது இடது கை கட்டை விரலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டெவான் கான்வேவுக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்டு க்ளீசன் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 50 லட்சத்துக்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது. ரிச்சர்டு க்ளீசன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

36 வயதாகும் ரிச்சர்டு க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான அவரது அறிமுக டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை வீழ்த்தினார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் டி20 போட்டிகளில் இதுவரை 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல முதல் தர போட்டிகளில் 143 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அவரது வருகை சிஎஸ்கேவுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory