» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் ஆர்சிபிக்கு அரையிறுதி: பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர்

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:36:36 PM (IST)ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இனிவரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது. ஆனால், போட்டியில் மிகுந்த வலிமையோடு எப்படி திரும்ப வருவது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டி எங்களுக்கு கடுமையாக அமைந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தனது அடுத்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory