» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி விளாசிய 3 சிக்ஸர் வெற்றிக்கு உதவியது: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சொல்கிறார்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:08:15 AM (IST)எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் தோனி விளாசிய 3 சிக்ஸர்கள் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு உதவியது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களே சோ்த்தது.

தொடா் தோல்விகளில் இருந்து மீண்டு இரு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த மும்பை, மீண்டும் தோல்வி கண்டுள்ளது. இரு தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த சென்னை, தற்போது இரு வெற்றிகளை தொடா்ந்து பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் துபே கூட்டணி அணியின் ஸ்கோரை பலப்படுத்த, கடைசி ஓவரில் ‘கேமியோ’ செய்த தோனி, ஹாட்ரிக் சிக்ஸா்களை விளாசி மைதானத்தை அதிர விட்டாா்.

கடைசி ஓவரில் தோனி தனியொருவராக சோ்த்த அதே 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது குறிப்பிடத்தக்கது. பௌலிங்கில் பதிரானா 4 விக்கெட்டுகள் சாய்த்து மும்பை பேட்டா்களை பதறடித்தாா். மும்பை பேட்டிங்கில் ரோஹித் சா்மா தனியொருவனாக போராடி சதம் கண்டாா்.

வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தது. "எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (தோனி) விளாசிய அந்த மூன்று சிக்ஸர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியது. இரண்டு இன்னிங்ஸுக்குமான வித்தியாசம் அதுதான். இந்த மாதிரியான ஆடுகளங்களில் கூடுதலாக எடுக்கப்படும் அந்த 10-15 ரன்கள் அணிக்கு தேவையானது” என தோனி குறித்து வேடிக்கையாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பும்ரா சிறப்பாக பந்துவீசி இருந்தார். எங்கள் அணியின் மலிங்கா (பதிரனா) அபாரமாக பந்து வீசி இருந்தார். யார்க்கர்களை துல்லியமாக வீசினார். துஷார் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அதை நாம் மறக்கக் கூடாது.

ரஹானே ஃபிட்னெஸ் ரீதியாக லேசான பின்னடைவை எதிர்கொண்டு உள்ளார். அதனால் அவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினால் சரியாக இருக்கும் என யோசித்தேன். நான் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் பேட் செய்வேன். அது எனக்கு சரி வரும். அதோடு அணியின் கேப்டன் என்ற பொறுப்பிலும் அந்த முடிவை நான் எடுத்திருந்தேன்” என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory