» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் தரவரிசை: ரோஹித்தை முந்திய ஜெய்ஸ்வால்!
புதன் 28, பிப்ரவரி 2024 4:45:03 PM (IST)
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால்.
2023ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்வால் (22 வயது) இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள், 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள் அடங்கும். சராசரி 69.36 ஆகும்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால், "டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இடத்தில் இருக்கும்போது நான் எனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும். அதற்காக நான் முயற்சித்து வருகிறேன். நல்ல தொடக்கம் கிடைத்து விளையாட ஆரம்பித்தவுடன் அதனை பெரிய ரன்களாக மாற்ற நான் முயற்சிக்கிறேன். ஏனென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல தொடக்கம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும்” என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐசிசியின் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால்.12வது இடத்தில் ஜெய்ஸ்வால், 13வது இடத்தில் ரோஹித் சர்மாவும், 9வது இடத்தில் விராட் கோலியும் இருக்கிறார்கள். முதலிடத்தில் கேன் வில்லியம்சனும் 2வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் இருக்கிறார்கள்.