» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் - பிசிசிஐ தகவல்!

சனி 17, பிப்ரவரி 2024 12:31:52 PM (IST)

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். 

ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். அவரது சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். போட்டிக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் அஸ்வின் பங்கேற்று பேசி இருந்தார். 

இந்நிலையில், ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார்."குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலை காரணமாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகி உள்ளார். இந்த சவாலான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), இந்திய அணியும் அஸ்வினுக்கு பக்க பலமாக துணை நின்று முழு ஆதரவு அளிக்கும்” என எக்ஸ் தளத்தில் பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

‘அஸ்வினின் தாயார் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். அவர் ராஜ்கோட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்நேரத்தில் அவரது தாயாருடன் இருக்க சென்னை திரும்பியுள்ளார்’ என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory