» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 5:16:57 PM (IST)

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசி ஆஸி அணியின் கிளென் மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்தார்.
அடிலெய்டில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் போவெல், டாஸ் வென்ற முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 241 ரன்களைக் குவிக்க மே.இ.தீவுகள் அணி 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மே.இ.தீவுகள் 0-2 என்று இழந்தது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன், சிக்சர் ஜெயண்ட் கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 120 ரன்களை விளாசி தனது 5-வது டி20 சதத்தை எடுத்ததன் மூலம் ரோகித் சர்மாவின் டி20 சதங்கள் எண்ணிக்கை சாதனையைச் சமன் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை யாஜிக் தங்கம் வென்றார்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:05:53 PM (IST)

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு: ஹைடன் கணிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:49:51 PM (IST)

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன்: கேப்டன் டெம்பா பவுமா சாதனை!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:25:04 AM (IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டிராபி பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு?
சனி 14, ஜூன் 2025 5:25:42 PM (IST)

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:24:10 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிக்கோலஸ் பூரன் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
செவ்வாய் 10, ஜூன் 2025 11:00:02 AM (IST)
