» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய பும்ரா!

புதன் 7, பிப்ரவரி 2024 4:38:04 PM (IST)டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறினார். இதுவரை முதலிடத்தில் இருந்த அஸ்வின் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் மற்றும் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளி மற்றொரு இந்திய வீரரான பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 3-வது இடத்தில் இருந்த அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த அஸ்வின் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா 2-வது இடத்தில் தொடருகிறார். இந்த வரிசையில் இந்தியா தரப்பில் ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனே தொடருகிறார். ஆஸ்திரேலிய வீரர் சுமித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரரான ரூட் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த வரிசையில் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளார். அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமின்றி ஜடேஜா, அஸ்வின் மற்றும் ஷகிப் அல் ஹசன் தொடருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் படேல் 1 இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory