» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர்!

புதன் 25, அக்டோபர் 2023 12:35:50 PM (IST)

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தற்போது வரை இந்திய அணி 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory