» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு: வெற்றியுடன் முடித்த ஆஸ்திரேலியா!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:31:31 PM (IST)

இந்தியாவுடனான 3-ஆவது கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சா்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் இணைந்தனா். அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தா் சோ்க்கப்பட, இஷான் கிஷணுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 96 ரன்கள் சோ்த்தாா். ஸ்டீவன் ஸ்மித் 74, மாா்னஸ் லபுசான் 72, டேவிட் வாா்னா் 56 ரன்கள் அடித்தனா். எஞ்சி விக்கெட்டுகள் குறைந்த ரன்கள் எடுத்தன. இந்திய பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் விளாச, விராட் கோலி 56, ஷ்ரேயஸ் ஐயா் 48, ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் அடித்தனா். எஞ்சியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் கிளென் மேக்ஸ்வெல் 4, ஜோஷ் ஹேஸில்வுட் 2, மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், தன்வீா் சங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இந்தியா முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் சதம்: ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
புதன் 29, நவம்பர் 2023 12:12:34 PM (IST)

டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ்: இத்தாலி 2-ஆவது முறையாக சாம்பியன்
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:52:29 AM (IST)

ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள் வெற்றி
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:13:03 AM (IST)

ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு
திங்கள் 27, நவம்பர் 2023 5:05:14 PM (IST)
_1701084731.jpg)
சிஎஸ்கே கேப்டனாக தோனி நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!
திங்கள் 27, நவம்பர் 2023 5:02:13 PM (IST)

மும்பை அணிக்கு மாறினார் ஹாா்திக் பாண்டியா: குஜராத் கேப்டனாக கில் நியமனம்!
திங்கள் 27, நவம்பர் 2023 4:04:32 PM (IST)
