» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி சாம்பியன்
செவ்வாய் 30, மே 2023 9:11:33 AM (IST)

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் ஆனது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்த்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆட்டத்தை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஓவரில் மூன்று பந்து வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மழை ஓய்ந்ததும் வெற்றி இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 கடந்து வெற்றி பெற்றது. அணியின் துவக்க வீரர்கள் ருத்ராஜ் 26 ரன்களும் கான்வே 47 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். ரஹானே 27 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ராயுடு 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிவம் துபே ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன் தேவை இருந்த நிலையில் ஜடேஜா 1 சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி பந்தை பவுன்டரிக்கு விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இதன் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது சென்னை அணி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு: வெற்றியுடன் முடித்த ஆஸ்திரேலியா!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:31:31 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 300+ ரன்கள் குவிப்பு: புதிய வரலாறு படைத்த நேபாளம் அணி
புதன் 27, செப்டம்பர் 2023 11:48:13 AM (IST)

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
புதன் 27, செப்டம்பர் 2023 11:03:52 AM (IST)

தூத்துக்குடியில், 7-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 8:23:14 AM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 11:37:29 AM (IST)

ஒருநாள் போட்டிகளில் 3000+ சிக்ஸர்கள் : இந்திய அணி வரலாற்றுச் சாதனை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:44:33 PM (IST)
