» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி!

திங்கள் 27, மார்ச் 2023 11:25:32 AM (IST)சென்சூரியன் மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி பெற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசித்தள்ளினார். ரோவ்மென் போவெல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 258 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 100 ரன்களை விளாசினார். ரீசா ஹென்றிக்ஸ், 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கடைசியில் அய்டன் மார்க்ரம் 38 ரன்களை விளாச 18.5 ஓவர்களில் 259/4 என்று உலக சாதனை வெற்றி பெற்று தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

இதற்கு முன்பு சர்வதேசப் போட்டியில் 2018-ல், நியூஸிலாந்துக்கு எதிராக 244 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்ததே சாதனை விரட்டலாகும். டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் 500 ரன்களுக்கும் மேல் எடுக்கப்பட்டதும் நேற்று ஒரு புதிய உலக சாதனையாகும். இப்போட்டியில் அடிக்கப்பட்ட 35 சிக்சர்கள் இன்னொரு டி20 உலக சாதனையாகும். 15 பந்துகளில் குவிண்டன் டி காக் அரைசதம் அடித்தார். இது ஒரு தென் ஆப்பிரிக்கா சாதனையாகும். இதுவரை தென் ஆப்பிரிக்கா, இந்தியா மட்டுமே 4 முறை 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணிகளாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory