» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

பார்வதிபுரத்திலிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் முக்கிய இணைப்புச் சாலையில், ஆற்றுநீர் அரிப்பால் உருவாகியுள்ள ராட்சத பள்ளத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் குறுகிய இணைப்புச் சாலையில், கடந்த பல மாதங்களாக அபாயகரமான ராட்சத பள்ளம் ஒன்று நிலவி வருகிறது.
அப்பகுதியில் ஆற்றில் இருந்து தண்ணீரை ஓடைகளுக்குத் திறந்து விடும் நீர்வழிப் பாலம் ஒன்று அமைந்துள்ளது. பாலத்தின் வழியே செல்லும் ஆற்றுநீரின் தொடர்ச்சியான அரிப்பால், சாலையின் அடிப்பகுதியிலுள்ள மண்ணும் கட்டமைப்பும் சேதமடைந்து, தற்பொழுது சாலையின் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளது.
ஏற்கனவே குறுகிய சாலையாக உள்ள நிலையில், இந்தப் பள்ளத்தால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்தப் பள்ளம் பெரும் ஆபத்தாக அமைந்து அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
இச்சாலை வழியாகத் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணித்து வருகின்றன.
தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருவதால், பள்ளம் மேலும் பெரிதாகிச் சாலை முற்றிலும் இடிந்து பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி, நீர்வழிப் பாலம் மற்றும் ஆற்றுநீர் அரிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைத்துச் சாலையை நிரந்தரமாகப் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிலாடி நபி: மதுபானக்கடைகள்,பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)








