» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:57:50 PM (IST)
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு, அணை கட்டக் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ராஜ்பூஷண் சௌத்ரி அளித்த பதிலில், மேக்கேதாட்டு அணை கட்டத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த தவறான பதில் பெரும் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், அந்தப் பதிலை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடுமாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தில் "மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியையும் வழங்கக் கூடாது. காவிரியைக் நம்பியுள்ள பிற கீழ்ப்பாசன மாநிலங்களின் பாசன உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடைமடை மாநிலத்தின் அனுமதியின்றி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள் புதிய அணைகளைக் கட்ட முடியாது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா மேக்கேதாட்டில் அணை கட்ட இயலாது.
கீழ்ப்பாசன மாநிலங்களுக்குச் செல்லும் நீரின் அளவைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் இன்றிச் செயல்படுத்த முடியாது. எனவே, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்." இவ்வாறு தமிழக முதல்வர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:10:56 PM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

வ.உ.சி. குறித்து நகைச்சுவை நிகழ்ச்சியில் அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கடும் கண்டனம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:32:50 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 5:54:38 PM (IST)








