» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இடுக்கு பிள்ளையார் கோவிலில் மேலும் ஒருவர் சிக்கியதால் பரபரப்பு: பெண் பக்தர் பத்திரமாக மீட்பு!

திங்கள் 27, ஜூலை 2026 8:37:02 AM (IST)

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழைந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குகை போன்ற சிறிய வாசல் உள்ளது. பக்தர்கள் இதன் பின்புறம் வழியாக நுழைந்து முன்பக்கம் வழியாக வெளியே வந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றுள்ளார். குகை போன்ற சிறிய வாசலில் நுழைந்த அவர், வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவரும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கிரிவலம் சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தபோது, உடல் பருமனான ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவில் குகை வாசல் வழியாகச் சென்று வெளியே வர முயன்றுள்ளார். ஆனால், இடுக்கின் அளவு சிறியதாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் பாதியிலேயே சிக்கிக்கொண்டு கூச்சலிட்டார்.

அங்கிருந்த சக பக்தர்கள் அவரது கரங்களைப் பிடித்துச் சிரமப்பட்டு இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து பக்தர்கள் சிக்கிப் பாதிப்புக்குள்ளாகி வருவதால், இடுக்கு பிள்ளையார் கோவிலில் உரியப் பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory