» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஆட்சிக்கால 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி நடவடிக்கை!
புதன் 24, ஜூன் 2026 12:50:47 PM (IST)
முந்தைய திமுக ஆட்சியில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கோரப்பட்ட டெண்டர் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனைத் தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களை ஆய்வு செய்து, அதில் முறேகடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவற்றை ரத்து செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை பல்வேறு துறைகளின் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, முந்தைய ஆட்சியில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தெண்டர்கள் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடியவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கும், நடத்துநர்களை (கண்டக்டர்) நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதி இல்லாததால், ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும். இது குறித்துத் தனியார் நிறுவனங்களின் ஒப்புதலைக் கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம், முந்தைய ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் பல்வேறு கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளைத் தவெக அரசு ரத்து செய்தது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும் கோவில்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஜென்-சி ஒருங்கிணைப்பாளரை நள்ளிரவில் கைது செய்ய முயற்சி: உதயநிதி, கனிமொழி கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 12:08:59 PM (IST)

ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் செய்த சாதனைகள் : பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்!
புதன் 24, ஜூன் 2026 11:01:14 AM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)








